எகிப்திய இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் – 30 பேர் பலி

511

எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் இராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 30 பேர் பலியாகியுள்ளனர்.

சினய் தீபகற்பத்தில் உள்ள இராணுவ சோதனை முகாம் ஒன்றின் மீது நூற்றுக்கும் மேறப்பட்ட தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 6 இராணுவத்தினர் பலியானதுடன், 20 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதன்போது எகிப்திய இராணுவத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதலில் 24 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

எகிப்தின் முன்னாள் தலைவர் முஹம்மது மோர்சி கடந்த 2013ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் எகிப்தின் பல பகுதிகளில் தீவிரவாதிகளின் வன்முறை செயல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE