எரிவாயு உருளையை மனைவி தலையில் போட்டு கொன்ற கணவன்

683

தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் எரிவாயு உருளையை போட்டு கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் விஜயபால் (37) கூலி தொழிலாளியான இவரின் மனைவி மரியசிலுவை மேரி (33) அங்கன்வாடியில் வேலை செய்து வந்தார்.

தம்பதிக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இரவு வீட்டுக்கு வந்த விஜயபால் மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மேரி வீட்டுக்குள் குழந்தைகளுடன் தூங்கி விட்டால், விஜயபால் வீட்டு வாசலில் உட்கார்ந்தார்.

நடுஇரவு 12.30 மணி ஆகியும் மனைவி மீது தீராத கோபத்தில் இருந்த அவர் வீட்டின் சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த எரிவாயு உருளையை தூக்கி கொண்டு வந்தார்.

குழந்தைகளுடன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த மேரியின் தலையில் எரிவாயு உருளையால்  ஓங்கி அடித்தார் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் மேரி உயிரிழந்தார்.

மேரியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மேரியின் சடலத்தை கைப்பற்றியதோடு, விஜயபாலை கைது செய்தார்கள்.

கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், விஜயபால் சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் குடித்து விட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்ததாகவும் தெரிகிறது.

விஜயபாலிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE