டிரம்பை கடுமையாக விமர்சித்த பிரான்ஸ் ஜனாதிபதி

510

ஈரான் மீது டொனால்டு டிரம்ப் கடுமையான நிலைபாடு கொண்டிருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் விமர்சித்துள்ளார்.

இம்மானுவேல் மேக்ரான் பிரான்ஸ் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக தேசிய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார்.

அவர் கூறுகையில், ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் விடயத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான நிலைப்பாட்டை அந்நாட்டுக்கு எதிராக எடுத்துவருவதாக குற்றம்சாட்டினார்.

ஆனால், டிரம்ப் ஆபத்தானவர் என தான் நினைக்கவில்லை என மேக்ரான் கூறினார்.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்துவது குறித்தும், அந்நாடு உடன்பாட்டை மீறுவதாகவும் டிரம்ப் சில தினங்களுக்கு முன்னர் குற்றம்சாட்டியிருந்த நிலையில் மேக்ரான் இப்படி கூறியுள்ளார்.

மேக்ரான் மேலும் கூறுகையில், ஈரான் அணுசக்தி உடன்படிக்கைக்கு தனது ஆதரவு உண்டு எனவும் இது தொடர்பாக பேச விரைவில் ஈரானுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் ஒழுங்கற்ற தலைமை சர்வதேச விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கவலைபடுகிறீர்களா என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, அதை பற்றி தான் கவலைப்படவில்லை எனவும், அமெரிக்கா தங்களின் நட்பு நாடு எனவும் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE