சிசுவை கொலை செய்து தானும் தற்கொலை “மன விரக்தியே காரணம் “

1371

தமிழகத்தில் கணவர் இறந்த துக்கத்தில் குழந்தையை கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருச்சியை சேர்ந்தவர் ரெக்ஸ்(வயது 30), எம்பிஏ பட்டதாரியான இவர் பெங்களூருவில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும் ரூத்கிறிஸ்டியானா என்ற பெண்ணுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது, இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக ரெக்ஸ் வேலையை விட்டு நின்றுவிட்டார்.

இதனால் ரூத்கிறிஸ்டியானா காட்பாடியை அடுத்த செங்குட்டையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இவரது பெற்றோர் தன்னுடைய மூத்த மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளனர், அதேவேளை ரெக்சும் வெளியே சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் ரெக்ஸ் வீட்டுக்கு வராததால் பதற்றமடைந்த ரூத்கிறிஸ்டியானா பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

மறுநாள் ரெக்ஸின் போனை தொடர்புகொண்ட போது, அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் அவரது நெற்றியில் நரசிம்மா என எழுதியிருந்ததால், தற்கொலை செய்து கொண்டது தன்னுடைய கணவர் தான் என்பதை உறுதி செய்தார்.

இத்தகவலறிந்து வந்த ரூத்கிறிஸ்டியானாவின் பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ரூத்கிறிஸ்டியானா பிணமாக கிடந்தார், குழந்தையும் படுக்கையில் பிணமாக கிடந்தது.

கணவர் இறந்த துக்கத்தில் ரூத்கிறிஸ்டியானா இவ்வாறு செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.

உடனடியாக விரைந்து வந்த காட்பாடி பொலிசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குபதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE