ஜேர்மனி ரயில் கட்டணம் அதிகரிப்பு

574

ஜேர்மனியின் முக்கிய இடங்களுக்கு செல்லும் ரயில்களின் பயண கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாக அந்நாட்டு ரயில்வே நிறுவனம் Deutsche Bahn அறிவித்துள்ளது.

ஜேர்மனியின் ரயில்வே நிறுவனமான Deutsche Bahn வெளியிட்டுள்ள அறிக்கையில், பெர்லினிலிருந்து முனிச்சுக்கு செல்லும் ரயில் கட்டணம் டிசம்பரிலிருந்து €150 ஆக உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

பழைய கட்டணத்தை விட இது 13.6 சதவீதம் கூடுதலாகும், டிசம்பர் 10-ஆம் திகதி இந்த கட்டண முறை அமுலுக்கு வரவுள்ளது.
மேலும், பெர்லினிலிருந்து முனிச்சுக்கு செல்ல புதிதாக €10 பில்லியனில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் அதிவிரைவு ரயில் அதே நாளிலிருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வகுப்பு வாரியாக பார்த்தால் முதல் வகுப்பு பயண கட்டணம் 2.9 சதவீதமும், இரண்டாம் வகுப்பு பயண கட்டணம் 1.9 சதவீதமும் உயர்த்தப்படவுள்ளது.
அதே போல ஹாம்பர்கிலிருந்து பெர்லினுக்கு செல்லும் ரயில் கட்டணமும் 2.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
பிராந்திய ரயில் கட்டணங்கள் அடுத்த வருடம் 2.3 சதவீதம் உயரும் எனவும் ரயில்வே நிறுவனம் அறிவித்துள்ளது.
உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE