தென்கொரியா- அமெரிக்கா போர் ஒத்திகை

836

அமெரிக்கா போர்க் கப்பல்களுடன் இணைந்து தென் கொரிய கடற்படை போர் ஒத்திகை தொடங்கியுள்ளது.

அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை என உலக நாடுகளை அச்சத்தில் வைத்துள்ளது வடகொரியா.

இந்நாட்டின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா- தென் கொரியா இணைந்து போர் ஒத்திகையை  தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் விமானம் தாங்கி கப்பல் உள்பட 40 போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் தாக்குதல் ஹொலிகொப்டர்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்றதாக கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது வழக்கமான போர் ஒத்திகை தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஒத்திகை தங்கள் நாட்டின் மீது படையெடுப்பதற்கான நடவடிக்கை என வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE