தொடர் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி(படங்கள் இணைப்பு )

562

வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை அல் – அஸ்ஹர் விளையாட்டுக் கழத்தினால் தொடர் உதைபந்தாட்ட சுழற்சி சுற்றுப்போட்டி பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய மைதானத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தலைவர் எஸ்.எம்.செயினுதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேள நிருவாக கட்டமைப்பு உறுப்பினரும், ஓட்டமாவடி கால்பந்தாட்ட தலைவரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான எஸ்.எம்.தௌபீக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும்  வாழைச்சேனை பொலிஸ் நிலைய நிருவாக பொறுப்பதிகாரி எல்.பி.பன்டார, கிராமிய பொருளாதார பிரதியமைச்சரின் இணைப்பாளர் எஸ்.எம்.றிஸ்மின், கல்குடா கால்பந்தாட்ட நடுவர் சங்க தலைவர் ஏ.எல்.நௌபல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பத்து கழகங்கள் பங்குபற்றி இடம்பெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகமும், பிறைந்துறைச்சேனை வேல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகினர்.

இதில் இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றுக் கொண்டதுடன், வெற்றி பெற்ற மூன்று கழகங்களுக்கு பணப் பரிசும், வெற்றிக் கேடயமும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE