இலங்கைக்கு எதிராக சாதனை படைத்த பாபர் ஆஸம்

877

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வீரரான பாபர் ஆஸம் 133 பந்துகளை எதிர்கொண்டு ஆறு பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்களை எடுத்தார்.

இது அவரின் ஏழாவது ஒருநாள் சதமாகும், 33 இன்னிங்ஸில் எடுத்துள்ளார், குறைந்த இன்னிங்கஸில் ஏழு சதங்களை அடித்த வீரர் என்ற பெருமை பெற்றார்.

அதுமட்டுமின்றி யுனைடெட் அராப் எமிரேட்ஸ்சில் மட்டும் ஐந்து சதங்களை எடுத்துள்ளார்.
குறிப்பாக இவரது திறமைகளில் முக்கியமானது அரைசதத்தை சதங்களாக மாற்றுவதே, இதுவரையிலும் கடந்தாண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியிலேயே அரைசதத்தை சதமாக மாற்றவில்லை.
18 இன்னிங்ஸில் இவரது சராசரி 75.53, இதே காலகட்டத்தில் இவருக்கு மேலே சராசரி வைத்திருப்பது வீராட் கோஹ்லி மட்டுமே.
உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE