இளம் குடும்பப் பெண்ணும் , மகனும் அடித்துக்கொலை(படங்கள் இணைப்பு)

2763

மட்டக்களப்பு- ஏறாவூர் – சவுக்கடி பிரதேசத்தில் கட்டிலில் படுத்துறங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண்ணும் அவரது மகனும் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

(17.10.2017) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

தன்னாமுனை முருகன் கோயில் வீதியைச்சேர்ந்த 26 வயதுடைய பீதாம்பரம் மதுவந்தி மற்றும் அவரது மகன் 11 வயதுடைய மதுசன் ஆகியோரே கொல்லப்பட்டவர்களென அடையாளங்காணப்பட்டுள்ளது.

இவரது வீட்டின் கூரை வழியாக கயிற்றைக்கட்டி இறங்கிய நபர்கள் இவர்களை தடிகளினால் அடித்துக்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவரது கணவர் துபாய் நாட்டில் வேலைவாய்ப்பிற்காகச் சென்று ஆறுவருடங்களாகின்றன. அடுத்தமாதம் நாடுதிரும்புவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தீபாவளி கொண்டாடுவதற்காக கடந்த (17) செவ்வாய்கிழமையன்று நகைகளை அடகு வைத்து சுமார் அறுபதாயிரம் ரூபா பணம் பெற்றுவந்துள்ளார். அத்துடன் அவரது வீட்டில் 30 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகளும் இருந்துள்ளன.
எனினும் இவ்வீட்டில் திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை.

ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE