கடலில் குளிக்கச் சென்றவர்களில் இருவரைக் காணவில்லை: தேடுதல் தீவிரம்

1435

முல்லைத்தீவில் கடலில் குளிக்க சென்ற இளைஞர்களில் இருவரை காணவில்லை என தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இளைஞர்கள் 7 பேர் இணைந்து முல்லைத்தீவு கடலில் இன்று குளிக்கச் சென்றுள்ள சமயம் இருவரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மீனவர்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞர்கள் மணல் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கபடுகின்றது.

மேலும் குறித்த இளைஞர்களைக் காணவில்லையென ஏனைய இளைஞர்களால் அறிவிக்கப்பட்ட போதிலும் கடற்படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்லவில்லையெனவும் தற்போது சம்பவ இடத்திற்கு சென்ற கடற்படையினர் மீனவர்களுடன் இணைந்து தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE