காணாமல் போண யுவதிகள் அனைவரும் சரண் – இரண்டு பேர் கைது

1657

காணாமல் போயிருந்த அனைவரும் சரண் – இரண்டு பேர் கைது

கொலன்னாவ – சாலமுல்ல பிரதேசத்தில் காணாமல் போயிருந்த 14 வயது சிறுமியும் சற்று முன்னர் கம்பஹா காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை காணாமல் போன மூன்று யுவதிகளில் இருவர் இன்று முற்பகல் வெல்லம்பிட்டி காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.

இந்தநிலையில் 14 வயதான சிறுமி, பெண்ணொருவருடன் கம்பஹா காவல்நிலையத்தில் சரணமைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் சரணடைந்த 19 வயது யுவதியும், 15 வயது சிறுமியின் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE