பி்ஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

1130

தேவையானவை

பால் – ஒரு லிட்டர்
சீனி – தேவையான  அளவு
பிஸ்தா – 50கிராம்
கார்ன் ப்ளார் – 2 கரண்டி
றோஸ் கலர் – சிறிது

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு பாலுடன் கார்ன் ஃப்ளார், தேவையான கலர் சேர்த்து கலந்து வைக்கவும்.

பாலை நன்கு காய்ச்சவும். தீயின் அளவை குறைவாக வைத்துக் கொள்ளவும். பால் காய்ந்ததும் சீனியை சேர்க்கவும்.

பிஸ்தாவை பொடி செய்து வைத்து கொள்ளவும்.

பாலில் பொடித்த பிஸ்தாவை சேர்க்கவும்.

பின்னர் கலர் கலந்து வைத்திருக்கும் பாலை சேர்த்து கலக்கவும்.

சிறிது நேரம் கழித்து இறக்கி மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி ஆற விடவும். அதன் பிறகு ஃப்ரீசரில் செட் ஆகும் வரை வைத்திருக்கவும்

சுவையான பிஸ்தா ஐஸ்கிரீம் தயார். பெளலில் வைத்து பிஸ்தாவை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE