மெர்சல் பட கட்டவுட் கட்ட முயன்ற போது பரிதாபமாக விஜய் ரசிகர் உயிரிழப்பு

1043

இன்று தீபாவளி தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் தளபதியின் மெர்சல் படம் வெளிவருகிறது. இதனையொட்டி திரையரங்குகளில் அதிக அளவில் விஜயின் கட்டவுட் வைத்து வந்தனர்.

இந்த நேரத்தில் தான் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி , காஞ்சிபுரத்தில் காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில்கள் சிலர் கட்டவுட் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மெர்சல் படத்தின் கட்டவுட் டை   14 வயது சிறுவன் உட்பட 4 பேர் சுவரின் மீது ஏறி நின்று கட்டியுள்ளனர்.

அப்போது சுவர் ஈரப்பதத்துடன் இருந்ததால், எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் லோகேஷ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த  கட்டவுட்கலாச்சாரத்தில் ஒவ்வொரு முன்னணி நடிகர்கள் படம் வரும்போது ரசிகர்கள் தங்கள் அறியாமல் உயிரை பணயம்வைத்து செய்வது கண்டிக்கத்தக்கது.

இதனை அந்த முன்னணி நடிகர்கள் தான் எனக்கு  கட்டவுட் வைக்க வேண்டாம் என்று தடுக்க வேண்டும், இல்லயென்றால் வருடந்தோறும் ஒரு உயிர் இப்படி வீணாக போவது மிகவும் பரிதாபம்

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE