இலங்கைக்கு எதிராக சாதித்த பாகிஸ்தான் வீரர்

779

பாகிஸ்தான் அணி அதிரடி பந்துவீச்சாளரான ஹசன் அலி நேற்றைய போட்டியில் சாதனை படைத்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பந்துவீச்சாளரான ஹசன் அலி 34 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதுமட்டுமின்றி மிககுறைந்த ஒருநாள் போட்டியில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார், இவர் 24 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்பாக வக்கார் யூனிஸ் 27 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

மேலும் 2017ம் ஆண்டு 17 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 41 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE