கோத்தபாய ராஜபக்‌ஷ இன்று கைது: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

1236

கோத்தபாய ராஜபக்‌ஷ கைது செய்யப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவிலிருந்து இன்று நாடு திரும்பவுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த அரசாங்க காலத்தில் மெதமுலன பிரதேசத்தில் டீ.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியகம் மற்றும் நினைவகம் அமைக்கப்பட்ட போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திட்டத்தின் போது, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 90 மில்லியன் ரூபா நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர், கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட சம்பந்தப்பட சில தரப்பினரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE