தீபாவளியன்று நடந்த சோகம்- 6 பேர் பலி

740

ஒடிசா மாநிலத்தில் அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள பலசோர் மாவட்டத்தில் உள்ள குன்டச்சக்கா கிராமத்தில் கோலக் பிரதான் என்பவர் வீட்டில் அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரித்து வந்துள்ளனர்.

நேற்று பிற்பகல் அங்கு ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது, இதில் 6 பேர் பலியானதுடன் 9 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவியை வழங்குமாறு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE