பிரான்சுக்குள் மகிழ்ச்சியாக வரவேற்கப்பட்ட அகதிகள்

1072

ஐரோப்பிய ஒன்றிய அகதிகள் இடம்பெயர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக கிரீஸிலிருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 234 அகதிகள் பிரான்ஸுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்கள்.

ஐரோப்பியாவின் ஒரு நாடுகளிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அகதிகளை மாற்றும் திட்டமான ஐரோப்பிய ஒன்றிய அகதிகள் இடம்பெயர்வு திட்டத்தின் கீழ் கீரிஸிலிருந்து 234 அகதிகள் பிரான்ஸுக்கு வந்தடைந்தனர்.

குடிபெயர்வுக்கான சர்வதேச அமைப்பும் இத்திட்டத்துக்கு தனது ஆதரவை அளித்தது. கிரீஸ் நாட்டின் குடியேற்ற கொள்கை அமைச்சர் யன்னிஸ் மொஸலஸ் அந்நாட்டு விமான நிலையத்துக்கு வந்து அகதிகளை வழியனுப்பி வைத்தார்.

234 பேரில் 132 பெரியவர்களும், 102 குழந்தைகளும் அடங்குகின்றன.
இதுகுறித்து குடிபெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கியான்லூகோ ரோகோ கூறுகையில், அகதிகளை இடம்மாற்றுவது என்பது ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமையை பலப்படுத்தும் கொள்கையாக பார்க்கிறோம்.

இந்த மக்கள் அகதிகளாக இருக்கும் நாடுகளில் இருந்து மீள்குடியேற்றப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

கிரீஸுக்கான பிரான்ஸ் தூதர் கிறிஸ்டோப் சாண்டேபி கூறுகையில், அகதிகள் இடம்பெயர்வு நடவடிக்கைகளில் பிரான்ஸ் அரசு முழுமையாக ஈடுபட்டுள்ளது.

அகதிகள் குடும்பங்களின் வாழ்க்கையில் இது ஒரு புதிய தொடக்கமாக அமையும் என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE