முல்லைக் கடலில் மாயமான மாணவர்கள்: மற்றையவரின் உடலும் மீட்பு

1981

முல்லைத்தீவு கடலில் நேற்று குளிக்கச் சென்று காணாமல்போன இரண்டாவது இளைஞனின் உடலும் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை தொடச்சியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த இளைஞனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

17 வயதுடைய அன்ரன் அமல்ராஜ் டினோஜன் என்ற இளைஞனின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்களை காணவில்லை என தேடுதல் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஒருவரது உடல் நேற்றைய தினம் மீட்கப்பட்டது. தொடர்ச்சியான தேடலின் பின்னர் மற்றைய இளைஞனின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கடலில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் கடலில் குளிக்கச்சென்ற 7 பேரில் இருவர் திடீரென அலையில் இழுத்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதால் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE