வித்தியா கொலைக் குற்றவாளிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம்

486

வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரும் மூன்று வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வித்தியா படுகொலை வழக்கில் சிறப்பு தீர்ப்பாயத்தினால் கடந்த மாதம் 27ஆம் திகதி மரணதண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர் உடனடியாக, கண்டி, பல்லேகல போகம்பரை சிறைச்சாலைக்கு பாதுகாப்புக் காரணங்களுக்காக நேற்று முன்தினம் மாற்றப்பட்டனர்.

இவர்களில் இருவர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும், இருவர் மகர சிறைச்சாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மூன்று பேர் தொடர்ந்தும், போகம்பரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒரே குற்றத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் ஒரே இடத்தில் சிறை வைத்திருப்பதிலுள்ள பாதுகாப்பு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டே இந்த மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE