அரசியல் கைதிகள் விடயத்தில் விரைவில் தீர்வு வழங்கப்படும்: ஜனாதிபதி உறுதி

1498

யாழ். பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் சங்கப் பிரதிநிதிகள் நேற்று ஜனாதிபதியைச் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, அநுராதபுர நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை மீண்டும் வவுனியா நீதி மன்றத்திற்குத் மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக யாழ். நகரத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் கவனம் வெசலுத்திய ஜனாதிபதி, இக்கோரிக்கைகள் நீதி மன்றத்துடன் தொடர்புபட்டவை என்பதால் இது தொடர்பில் சட்ட மா அதிபர் ஊடாக நீதி மன்றத்திற்கு விடயங்களை முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக குறிப்பிட்டதுடன், சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

தற்போது நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதன் மூலம் இருதரப்பினருக்கும் தெளிவான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் ஒரே மேசையில் இருந்து கலந்துரையாடுவதன் மூலம் நிலவுகின்ற பல்வேறு தவறான கருத்துக்களை நீக்கிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சில நாட்களில் ஏனைய பிரச்சினைகள் குறித்து சட்ட மா அதிபர், பொலிஸார் மற்றும் நீதி அமைச்சுடன் கலந்துரையாடி பெற்றுக்கொடுக்க முடியுமான தீர்வுகள் குறித்து அடுத்த வாரத்தில் அறிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில், அமைச்சர் சாகல ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, வட மாகாண ஆளுனர் ரெஜிநோல்ட் குரே, ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன, சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE