இளைஞர்களை நம்பியே இலங்கையின் எதிர்காலம்

972

தொழிற் திறமையையும் அறிவையும் வளர்த்துக் கொள்கின்ற இளைஞர்களை நம்பியே இலங்கையின் எதிர்காலம் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் அத்துல் கெசாப் இதனைத் தெரிவித்துள்ளார்.

யூலீட் என்ற பெயரில் இளையோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையிலான வேலைத்திட்டம் ஒன்று அமெரிக்காவின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் திறமையானதும், நெகிழ்வுத் தன்மைக் கொண்டதுமான தொழிற்படையை உருவாக்க அமெரிக்கா பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE