இளைஞர் ஏமாற்றியதால் ஆசிட் குடித்த சிறுமி

1015

இளைஞர் ஒருவர் கர்ப்பமாக்கி ஏமாற்றியதால் மனமுடைந்து ஆசிட் குடித்த சிறுமியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (23) கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவருக்கும், நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சசிகுமார் பலமுறை அவரை பலாத்காரம் செய்தநிலையில் சிறுமி கர்ப்பமானாள்.

இந்த தகவல் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் பிரச்சனை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சிறுமி ஆசிட்டை குடித்துள்ளார்.

உடனடியாக பெற்றோர் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் அவர் வயிற்றில் இருந்த குழந்தை இறந்து பிறந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், சசிகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE