கனகராயன்குளத்தில் கஞ்சாவுடன் நால்வர் கைது

1816

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் பல லட்சம் பெறுமதியுடைய கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் நேற்று பொலிஸாரால் கைது செய்ய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதி நோக்கி பயணித்த சிறிய ரக கார் வாகனத்தினை கனகராயன்குளம் பகுதியில் வைத்து சோதனையிட்ட பொலிஸார் வாகனத்திலிருந்து 9 கிலோ 732 கிராம் கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.

வாகனத்தில் சாரதி உட்பட நால்வரை (28,28,28,33 வயதுடையவர்களை) பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் கைப்பற்றியுள்ளனர்.

கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பிந்து தலைமையில், போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசேலவின் வழிகாட்டலின் கீழ், பொலிஸ் சார்ஜன் வீரசிங்க(32535), பொலிஸ் கொஸ்தாபர் விஜயசிறி (86791) ஆகிய பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த நான்கு பேரையும் எதிர்வரும் 23ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE