சிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபர் கைது

2180

சிறுமியொருவரை துஸ்பிரயோகம் செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தரம் ஒன்றில் கல்வி கற்கும் சிறுமி ஒருவரே இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.

கொஸ்வத்த பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற அனாமதேய அழைப்பு ஒன்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, ஐந்து வயதான சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது.

பொத்துவட்டன, கஹட்டவில என்னும் இடத்தைச் சேர்ந்த 42 வயதான நபர் ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் வீட்டுக்கு அருகாமையில் வசித்து வரும் நபர் சிறுமியை கொஞ்சும் போர்வையில், செல்லிடப்பேசியில் ஆபாச காட்சிகளை காண்பித்து பாலியல் ரீதியாக சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE