சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களின் அஞ்சலி நிகழ்வு யாழ். பல்கலையில்

1771

பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஓராண்டு அஞ்சலி நிகழ்வு இன்று பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவருகின்றது.

இவ் அஞ்சலி நிகழ்வு இன்று காலை யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்று வருகின்றது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டி சந்திப் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பல்கலைகழக மாணவர்கள் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்திருந்தனர்.

மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் வழங்கிய உத்தரவை மீறிப் பயணித்த போதே அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கலைப்பிரிவில் கல்விகற்றுவந்த மூன்றாம் வருட மாணவர்களான எஸ்.சுலக்ஸன் மற்றும் என்.கஜன் ஆகிய மாணவர்களே பலியாகியிருந்தனர்.

இவர்களின் நினைவு நாள் இன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

– யாழ் நிருபர் –

 

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE