முரசொலி அலுவலகம் சென்ற கருணாநிதி

852

சென்னை கோடம்பாக்கம் சாலையில் முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முரசொலி பவளவிழா காட்சியரங்கை, திமுக தலைவர் கருணாநிதி பார்வையிட்டுள்ளார்.

இதற்காக கோடம்பாக்கம் சாலையில் உள்ள முரசொலி அலுவலகத்திற்கு, கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ஓராண்டுக்கு பிறகு வெளியே வந்தார் கருணாநிதி.

உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனைக்கு மட்டுமே சென்றுவந்த நிலையில், முரசொலி அலுவலகத்திற்கு கருணாநிதி சென்றுள்ளார்.

நுரையீரல் மற்றும் தொண்டை தொற்றுக் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு உடல்நலம் தேறியதை அடுத்து அவர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
நோய் தொற்று ஏதும் ஏற்படாவண்ணம் அவரை பார்ப்பதற்கு பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால்கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்திற்கு நேரில் சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள காட்சியரங்கை பார்வையிட்டுள்ளார்.
உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE