யாழ்.பல்கலைக்கழக மாணவர் இன்று வகுப்பு பகிஷ்கரிப்பு

1251

ஜனாதிபதி சாதகமான பதில் தரும் வரை வகுப்பு பகஷ்கரிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தில் இன்று (20.10) நடைபெற்றது.
இதன்போதே பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்கள் ஒன்றியத் தலைவர் கிருஸ்ணமீனன் இதனைத் தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று (19.10) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.

எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து புதன்கிழமைக்குள் சாதகமான பதில் தருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், கலந்துரையாடலின் போது ஜனாதிபதியின் பதில்கள் திருப்தியளிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், தமிழ் அரசியல் கைதிகளின் நிலமை தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தமக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும், அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கும் மாணவர்கள் என்ற ரதியில் தலையிட வேண்டிய தேவை யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு உள்ளதென்றும், ஜனாதிபதியின் பதில்கள் திருப்தியாக அமையாவிடின் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக வரும் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE