லண்டனில் அதிகரித்து செல்லும் பராமரிப்பு செலவு

1425

லண்டனில் பெற்றோருக்கான ஊதிய அதிகரிப்பைவிட குழந்தை பராமரிப்பிற்கான செலவானது ஏழு மடங்கு அதிகமாகும் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

லண்டனில் சம்பள அதிகரிப்பைவிட குழந்தை பராமரிப்பு செலவானது 7.4 மடங்கு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த பிரித்தானியாவை எடுத்துக்கொண்டால், குழந்தை பராமரிப்பு செலவானது ஊதிய அதிகரிப்பைவிட நான்கு மடங்கு அதிகமாகும்.

2008 முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஒரு வயதுடைய குழந்தையின் பெற்றோரின் சராசரி ஊதியம் வெறும் 12 வீதத்தினால் மாத்திரமே உயர்ந்துள்ளது. ஆனால் அதே காலப்பகுதியில் குழந்தை பராமரிப்பு செலவானது 48 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

கிழக்கு மிட்லண்ட்ஸில் ஊதிய அதிகரிப்பைவிட குழந்தை பராமரிப்பு செலவானது ஏழு மடங்கு அதிகரித்துள்ள அதேவேளை, மேற்கு மிட்லண்ட்ஸில் 4.8 மடங்காக அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவிட

பகிருங்கள்..!

SHARE